அதிராம்பட்டினம், பிப்-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இளைஞர் செஞ்சுலுவை சங்கம் சார்பில் அவசரகால முதலுதவி குறித்து விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி கல்லூரியில் திங்கட்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்தார். கல்லூரி இளைஞர் செஞ்சுலுவை சங்க அலுவலர் மேஜர் டாக்டர் எஸ்.பி கணபதி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் செஞ்சுலுவை சங்க அமைப்பாளரும், பூண்டி புஸ்பம் கல்லூரி பேராசிரியர் பி. நடராஜன் கலந்துகொண்டு பேசுகையில்; மாணவர்கள் கல்வி கற்பதோடு பொதுநல சேவைகளில் ஈடுபட முன்வர வேண்டும். குறிப்பாக இரத்த தானம் செய்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அவசரகால முதலுதவி ஆகியவற்றில் தன்னார்வலராக செயல்பட வேண்டும். இந்தியன் செஞ்சுலுவை சங்கம் மூலம் செயல்படுத்தி வரும் அவசரகால முதலுதவிப் பணிகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார். கருத்தரங்க முடிவில் பேராசிரியை டாக்டர் சித்ரா நன்றி கூறினார்.
இக்கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் உதவியாளர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.