இ-சேவை மையங்களில் இலவச வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2017 ஜன.1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், கடந்த ஆண்டு செப்.1-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் திருத்தம் இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு செப்.1 முதல் 30-ஆம் தேதி வரை பெறப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜன. 5 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம்பெற்றவர்கள் தங்கள் விண்ணப்படிவத்தில் ஏற்கனவே தங்கள் மொபைல் எண்ணை குறிப்பிட்டிருந்தால், அவர்களுக்கு குறுஞ்செய்தியாக ஒரு தனிப்பட்ட அடையாள எண் ( Unique ID ) தெரிவிக்கப்படும்.
இந்த அடையாள எண்ணை தங்கள் பகுதியில் அல்லது அருகில் உள்ள இ-சேவை மையத்தில் காண்பித்து வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
மொபைல் எண்ணை அளிக்காத புதிய வாக்காளர்கள் தேர்தல் துறையின் கட்டணமில்லா உதவி எண் 1950-ஐ தொடர்பு கொண்டு, மொபைல் எண்ணை பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு அடையாள எண் அனுப்பப்படும். அவர்கள் இ-சேவை மையங்களில் தங்களுடைய ஏதேனும் ஒரு புகைப்பட அடையாளச் சான்றை காண்பித்து வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.