.

Pages

Thursday, February 16, 2017

பட்டுக்கோட்டையில் வேலை வாய்ப்பு முகாம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம படித்த ஆண்/பெண் இருபாலருக்கான கட்டணமில்லாத வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 19.02.2017 ஞாயிறு அன்று காலை 9.30 மணிக்கு பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்களான மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகிய வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.

இதில் கலந்து கொள்ள விரும்பும் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள 10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, தொழிற்கல்வி, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சுயகுறிப்பு (Bio-Data) புகைப்படம் ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.