அதிரை நியூஸ்: பிப்-22
வித்தியாசமாக சிந்திக்கச் சொல்லி ஒரு இந்திய தனியார் தொலைபேசி சேவை நிறுவனம் "வாட் ஏன் ஐடியா சார்ஜி!" என ஐடியா தருவதை தொலைக்காட்சி விளம்பரங்களில் அடிக்கடி பார்த்திருப்போம்.
ஆண்களை பொறுத்தவரை குறிப்பாக பேச்சுலர் வாழ்க்கைக்குள் நிர்பந்திக்கப்பட்டவர்களும் இளவட்டங்களும் தங்களின் சுற்றுப்புற சுத்தங்களை பேணுவதில் ரொம்பவே மோசமுங்க!
மேற்காணும் இலக்கணப்படி ஜீவித்திருக்கும் ஒரு கல்லூரி மாணவர் தான் 18 வயது கானர் காக்ஸ். இவரது வீட்டில் தனது அறையை அசுத்தமாக வைத்திருப்பதில் கானருக்கு நிகர் கானரே என்பதால் அவனது தாய் குப்பைகளை அகற்றக்கோரி பலமுறை சொல்லியும் ஊகும்... யாருகிட்ட... நாங்கள்ளாம் யாரூ ... என்ற ரீதியில் புறக்கணித்துவிட்டு காலேஜ் புறப்பட்டுவிட்டார்.
கானர் காக்ஸை தேடி திடீரென ஒரு பார்சல் வர அதுவும் தன் தாயின் அன்பான கையெழுத்துடன் தேடிவர... தலைகால் புரியாத சந்தோஷத்தில் பிரித்துப் பார்த்தவருக்கு புரிந்துவிட்டது, உள்ளிருந்தது அவ்வளவும் அவர் அறையில் பலமுறை தாய் சொல்லியும் அள்ளாமல் போட்டிருந்த குப்பை.
இது டிவிட்டர் காலம் என்பதால் குப்பை நியூசெல்லாம் டிரெண்டாக வேண்டும் என்ற விதியின்கீழ் இதுவும் பரவி வருகிறது ஆனாலும் தனக்கு பாடம் புகட்ட தேர்ந்தெடுத்த இந்த வித்தியாசமான ஐடியாவுக்காக தன் தாயை பெருமையுடன் புகழ்கிறார் பையன்.
Source: Mailonline
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.