தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல் துறையில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரிச்செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை ஆற்றினார். முன்னிலை வகித்த கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் சிறப்புரை வழங்கினார்.
கல்லூரி கணினி அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் என். ஜெயவீரன் வரவேற்றுப்பேசினார். கல்லூரி துணை முதல்வர்கள் எம். முகமது முகைதீன், எம். நாசர், கல்லூரிப் பேராசிரியர்கள் ஜெ. சொக்கலிங்கம், எஸ்.பி கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில், கல்லூரி முன்னாள் மாணவர்களின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரி கணினி அறிவியல் துறையில் பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியினை, பேராசிரியைகள் ஏ.சித்தி ஜாபிரா, எஸ்.சுபாதேவி ஆகியோர் தொகுத்து வழங்கினார். முடிவில் பேராசிரியர் ஏ.ஷேக் அப்துல் காதர் நன்றி கூறினார்.