.

Pages

Friday, March 15, 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பட்டுக்கோட்டையில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, மார்ச் 15
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பட்டுகோட்டையில் (அறந்தாங்கி முக்கம் அருகில்) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மாநிலப் பேச்சாளர் திருச்சி ரபீக் கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில், பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,  பெண்களை தவறாக ஆபாச வீடியோ எடுத்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரியும் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.