தஞ்சாவூர் மாவட்டம், தேர்தல் தொடர்பான புகார்களை 18004258036 மற்றும் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை 18004258036 மற்றும் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். பெறப்படும் புகார், தொடர்புடைய கண்காணிப்பு குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளுர் தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களை கண்காணிக்க ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளுர் தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் மாவட்ட அளவில் விளம்பரம் செய்ய ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு அறை, ஊடக மைய அறை, மாவட்ட தொடர்பு மையம் ஆகியவற்றையும், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.