.

Pages

Friday, March 8, 2019

தேர்தல் கண்காணிப்பு குழுக்களுக்கான பயிற்சி கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு  தேர்தல் கண்காணிப்பு குழுக்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (08.03.2019) நடைபெற்றது.

பயிற்சி கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது : -
எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் பொருட்டு அமைக்கப்படவுள்ள கண்காணிப்பு குழுக்களான பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், காணொளி கண்காணிப்பு குழுக்களில் இடம் பெற உள்ள அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியினை இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி அமல்படுத்துதல் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணித்தல், தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் மற்றும் குற்றங்கள் தடுத்தல் ஆகியவை கண்காணிப்பு குழுக்களுக்கான பணிகளாகும்.

தேர்தல் தொடர்பான எந்தவிதமான விதிமீறல்கள் மற்றும் குற்றங்களை சம்பவ இடத்திற்கு உடனடியாக நேரில் சென்று தடுப்பது பறக்கும் படை குழுவினரின் பணியாகும்.

குறிப்பிட்ட தூர இடைவெளியில் சோதனைச்சாவடி மையங்களை அமைத்து முறையான கணக்கு இல்லாமல் வரையறுக்கப்பட்ட அளவைவிட  அதிகமான பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்வதை பறிமுதல் செய்வது நிலையான கண்காணிப்பு குழுவினரின் பணியாகும். 

அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நட்சத்திர பேச்சாளர்களின் பிரச்சாரம், பேரணி, ஊர்வலம், பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை, மின்விளக்கு, ஒலிபெருக்கி, தளவாட சாமான்கள், போஸ்டர், பேனர், விளம்பர தட்டி உள்ளிட்ட தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்வது காணொளி கண்காணிப்பு குழுவினரின் பணியாகும்.  காணொளி கண்காணிப்பு குழுவினரால் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஆய்வு செய்து  தேர்தல் விதிமுறை மீறல்கள் உள்ளனவா என்பது குறித்து கண்டறிவது காணொளி  பார்க்கும் குழுவினரின் பணியாகும்.

அனைத்து வகையான கண்காணிப்பு குழுக்களிலும் இடம் பெறும் அலுவலர்கள் தங்கள் பணியினை இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

பயிற்சிக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கஜா புயல் மறுசீரமைப்பு மறுவாழ்வு திட்ட அலுவலர் ராஜகோபால் சுங்காரா, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.