.

Pages

Monday, March 4, 2019

ஆதரவற்ற குழந்தை தத்து நிறுவனத்திடம் ஒப்படைப்பு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் இன்று (04.03.2019 ) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் மற்றும் காநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாகனத்தையும் கொடி அசைத்து தொடங்கி வைத்து, தொட்டில் குழந்தைகள் திட்டத்தின்கீழ் பெண் குழந்தையை தொண்டு நிறுவனத்திடம்  மாவட்ட  ஆட்சித்  தலைவர்  ஆ. அண்ணாதுரை  ஒப்படைத்தார். 

பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் லேவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 729 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை பெற்றுக் கொண்டார். பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறந்த  மூன்று பட்டு விவசாயிகளுக்கு முதல் பரிசாக தஞ்சாவூர் மாவட்டம், மணல்மேடு கிராமத்தை சேர்ந்த த. முருகேசன் (த.பெ. தங்கையன்) என்பவருக்கு ரூ. 25,000-க்கான காசோலையினையும், இரண்டாம் பரிசாக கீழபுனவாசல் கிராமத்தைச் சேர்ந்த நெ. நாகராஜன் (த.பெ. நெடுஞ்செழியன்) என்பவருக்கு ரூ. 20,000-க்கான காசோலையினையும், மூன்றாம் பரிசாக கீழபுனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆ. காசிநாதன் (த.பெ. ஆறுமுகம்) என்பவருக்கு ரூ.15,000-க்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை வழங்கினார்.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் மற்றும் காநோய் தடுப்பு குறித்து பொது மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்இ அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வக வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்து, இந்த அதிநவீன வசதிகள் கொண்ட ஆய்வாக வாகனம்  நகரம் மற்றும் கிராமம் கிராமமாக சென்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும்,  இவ்வாய்க வாகனத்தில் HIV மற்றும் காசநோய் தொற்று குறித்து உடனடியாக அறிந்து கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் ராசாமிராசுதார் மருத்துவமனையில் 13.02.2019 அன்று தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட 20 நாட்களேயான பெண் குழந்தையை  அரியலுர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா என்ற தத்து நிறுவனத்திடம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை ஒப்படைத்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட  வருவாய்  அலுவலர் ந. சக்திவேல், துணை யேக்குநர் (காசநோய் ) மருத்துவர் டி. மாதவி, உதவி இயக்குநர் (பட்டு வளர்ச்சி ) உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.