.

Pages

Tuesday, March 26, 2019

CBD சார்பில் 'தண்ணீர் சேமிப்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி (படங்கள்)

மதுக்கூர், மார்ச். 26
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) இரத்த தான சேவை அமைப்பின் சார்பில், மதுக்கூர் அருகே உள்ள பெரியக்கோட்டை அரசு உயர் நிலைப் பள்ளியில் 'தண்ணீர் சேமிப்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை ராஜ பாக்கியம் தலைமை வகித்தார். அவ்வமைப்பின், மதுக்கூர் பேரூர் செயலர் எச். இம்தியாஸ் அகமது கலந்துகொண்டு தண்ணீரின் இன்றியமையாமை குறித்தும், தண்ணீரை பாதுகாப்பான முறையில் சேமித்து வைப்பதின் வழிமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். இதில், 70 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும், மரங்களை வளர்க்கவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் அவ்வமைப்பின் உறுப்பினர் நூர் முகமது உட்பட பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.