.

Pages

Friday, March 15, 2019

அம்மாபட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கி உயிரிழந்த கடல் பசு (படங்கள்)

அம்மாபட்டினம், மார்ச்.15-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு உயிரிழந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் இடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அம்மாபட்டினத்தை அடுத்த ஆதிப்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சேக்தாவுது. மீனவரான இவர் கடந்த புதன்கிழமை இரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார் அப்போது அவரது வலையில் பிரம்மாண்டமான ஏதோ ஒன்று சிக்கியுள்ளது.

பெரிய வகையிலான மீன் கிடைத்துள்ளது என சந்தோஷத்துடன் வியாழக்கிழமை அதிகாலை கரை திரும்பிய மீனவர் சேக்தாவுதுக்கு, தன் வலையில் சிக்கி இருப்பது அரசால் பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட அபூர்வ வகையிலான ஆண், பெண் கடல் பசு என தெரியவந்தது.

இதையடுத்து சேக்தாவுது மற்ற மீனவர்கள் உதவியுடன் தனது வலையில் சிக்கிய ஆண் கடல் பசுவை பத்திரமாக மீட்டு மீண்டும் கடலுக்குள் விட்டார். மற்றொரு பெண் கடல் பசு வலையில் சிக்கி உயிருக்கு போராடியது.

இதையடுத்து அவர் கடலோர காவல் படைக்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்தார். இதன்பேரில் வியாழக்கிழமை காலை புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார், புதுக்கோட்டை வனச்சரகர் ராஜசேகர், இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர் மது மகேஷ் குழுவினர் மற்றும் ஓம்கார் பவுண்டேஷன் டாக்டர் பாலாஜி, கடலோர காவல்படை அலுவலர் ரகுபதி ஆகியோர் அங்கு வந்து வலையில் சிக்கிய பெண் கடல் பசுவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக பெண் கடல் பசு உயிரிழந்தது. இதையடுத்து அதை கரைக்கு கொண்டு வந்து கால்நடை மருத்துவர் முத்துக்குமார் உதவியுடன் ஆய்வு செய்தபோது, இறந்து போனது, பெண் கடல் பசு என்றும் அது கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வயிற்றில் இருந்த குட்டியை ஆபரேஷன் செய்து உயிருடன் மீட்டு கடலுக்குள் விடும் முயற்சி நடந்தது. ஆனால் குட்டியும் இறந்தது. இறந்து போன பெண் கடல் பசு சுமார் 11 அடி நீளமும் 500 கிலோ எடையும் உடையதாக இருந்தது. வயிற்றில் இருந்த குட்டி கடல் பசு 30 கிலோ எடையுடன் இருந்தது.  பின்னர் அதிகாரிகள் இறந்து போன இரண்டு கடல் பசுவையும், கடற்கரையில் குழி தோண்டி புதைத்தனர்.

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதியில் காணப்படும் அபூர்வ வகை உயிரினமான கடல் பசுவை பிடிப்பதற்கு அரசு தடைவிதித்துள்ளது. சில நேரங்களில் மீனவர் வலைகளில் சிக்கும் கடல் பசு உயிருடன் மீட்கப்பட்டு கடலுக்குள் விடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், மீனவர் வலையில் சிக்கிய பெண் கடல் பசு மற்றும் அதன் குட்டி உயிரிழந்த சம்பவம் இயற்கை வன உயிர் ஆர்வலர்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
  
 
 
 
 
 
 
  
  
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.