பேராவூரணி, மார்ச் 13
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை தொலைபேசியில் பேசிய மர்ம நபர், பேராவூரணி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சற்று நேரத்தில் அது வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டாராம்.
சென்னையிலிருந்து தஞ்சை மாவட்டக் காவல் துறைக்கு தகவல் அளிக்குப்பட்டது. மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவின்பேரில், தஞ்சாவூரில் இருந்து வெடிகுண்டு கண்டறியும் பிரிவு சிறப்பு படையினர், மதுக்கூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பேராவூரணி போலீஸார் ஆகியோர் பேராவூரணி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதும், தொலைபேசி தகவல் புரளி என்பதும் தெரிய வந்தது. ஆனாலும், ரயில் நிலையத்தில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சாந்தி, திருவாரூர் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் போலீஸார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.