தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (14.03.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்து தெரிவித்ததாவது : -
தஞ்சாவூர் மாவட்டத்தில் 14.3.2019 முதல் 29.03.2019 வரை 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு 126 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வில் 16,668 மாணவர்களும், 16,809 மாணவியர்களும், மொத்தம் 33,477 பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
இத்தேர்வு நடைபெறும் 126 தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள்ää அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 2739 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 146 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இம்மாணவர்களுக்கு தேர்வு எழுத வசதியாக தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 50 நிமிடங்கள் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் மாணாக்கர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு 272 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளின் போது, முதன்மைக்கல்வி அலுவலர் சாந்தா மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.