அதிரை நியூஸ்: மார்ச்.07
குவைத் தேசிய மற்றும் விடுதலை நாட்களை முன்னிட்டு நடைபெற்ற நாடு தழுவிய தமிழ் அமைப்புகளுக்கான 14ம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் 12 அமைப்புகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், குவைத் தேசிய மற்றும் விடுதலை நாட்களை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் குவைத் தமிழ் அமைப்புகளுக்கான கிரிக்கெட் போட்டிகளை கைத்தான் கே-டிக் விளையாட்டுத் திடலில் ஏற்பாடு செய்திருந்தது. சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமையில் நடைபெற்ற போட்டிகளை பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர், இணைப் பொருளாளர் ஹச். முஹம்மது நாஸர் உள்ளிட்ட சங்கத்தின் விளையாட்டுக் குழுவினர் முன்னிலை வகித்தனர்.
குவைத் நாட்டில் சமூக சேவைகள் செய்து கொண்டிருக்கும் தமிழ் அமைப்புகளில் பனிரெண்டு அணியினர் பங்கேற்றனர். ஒரு பிரிவில் நான்கு அணிகள் என மொத்தம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் முதலிடம் பெற்ற அணிக்கும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கும், ஆட்ட நாயகனுக்கும், தொடர் ஆட்ட நாயகனுக்கும் தங்கக் காசுகளும், வெற்றிக் கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ, குவைத் ரிலையன்ஸ் கார்கோ நிறுவனர் ஜனாப் அப்துல் காதர், குவைத் வெல்டன் ரியல் புரோமோட்டர்ஸ் நிறுவனர் ஜனாப் முஹம்மது கவுஸ், அறந்தை கணேசன் அறக்கட்டளை நிறுவனர் அல்ஹாஜ் முஹம்மது யூனுஸ் மற்றும் கைத்தான சூப்பர் சென்னை ரெஸ்டாரென்ட் நிறுவனர் ஜனாப் முனாஃப் பாஷா ஆகியோர் போட்டியில் முதலிடம் பெற்ற சென்னை ஃபயர் பாய்ஸ் அணியினருக்கும், இரண்டாமிடம் பெற்ற குவைத் தமிழ் நண்பர்கள் அணியினருக்கும் முறையே பத்து கிராம் தங்கக் காசுகள், ஐந்து கிராம் தங்கக் காசுகள், வெற்றிக்கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினர். ஆட்ட நாயகன் விருது சென்னை ஃபயர் பாய்ஸ் அணி வீரர் செய்யது ஃபாரூக் பாஷாவுக்கும், தொடர் ஆட்ட நாயகன் விருது அதே அணியின் மற்றொரு வீரர் தர்மராஜ் ரவிச்சந்திரனுக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், விளையாட்டுக் குழுவினர் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். விளையாட்டு வீர்ர்களுக்கு காலை உணவு, குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் போன்றவையும், பார்வையாளர்களுக்கு தேநீர் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தன.
செய்தி மற்றும் படங்கள்:
பறங்கிப்பேட்டை கலீல் பாகவீ

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.