அதிராம்பட்டினம், மார்ச்.01
அதிராம்பட்டினம், நடுத்தெரு 'துலுக்க பள்ளிவாசல்' நிர்வாகப் பொறுப்பிற்கு புதிதாக 7 டிரஸ்டிகள் தமிழ்நாடு வக்பு வாரியத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதிராம்பட்டினம், நடுத்தெரு 'துலுக்க பள்ளிவாசல்' நிர்வாகப் பொறுப்பிற்கு புதிதாக 7 டிரஸ்டிகள் தேர்விற்கு, கடந்த செப்.28 ந் தேதி, தஞ்சாவூர் வக்ஃபு கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மஹல்லாவாசிகள் விண்ணப்பிப்பதற்கு 'பொதுஅறிவிப்பு' தக்வா பள்ளிவாசல், பெரிய ஜும்மா பள்ளிவாசல், வி.ஏ.ஓ அலுவலகம் ஆகியவற்றின் அறிவிப்பு பலகையில் தகவல் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த எம்.ஏ முகமது ஹனீபா, எஸ்.கே.எம் அகமது அன்சாரி, ஏ.அயூப்கான். அ.அப்துல் ரஹ்மான், எம்.அகமது அஸ்லம், எம்.இசட். அப்துல் மாலிக், எஸ்.முகமது ஜமீல், ஏ. சாகுல் ஹமீது, எம்.எஸ் ஷிஹாபுதீன், எஸ்.ஜெ அப்துல் ஜலீல், எம்.சாகுல் ஹமீது, எம்.அகமது இப்ராஹீம், எம்.அபூபக்கர், எஸ்.அகமது ஹாஜா ஆகியோர் அடங்கிய 14 பேர் விண்ணப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், புதிய டிரஸ்டிக்கான தேர்வு தமிழ்நாடு வக்ஃப் வாரிய சென்னை அலுவலகத்தில் கடந்த பிப்.19 ந் தேதி நடத்தப்பட்டது. இதில், எஸ். முகமது ஜமீல் (த/பெ. ஷேக் அப்துல் காதர்), ஏ.சாகுல் ஹமீது (த/பெ. அப்துல் வஹாப்), எம்.எஸ். ஷிஹாபுதீன் (த/பெ. ஷம்சுதீன் ஹாஜியார்), எம்.சாகுல் ஹமீது (த/பெ. முகைதீன்), எம்.அபுபக்கர் (த/பெ. முகமது யூசுப்), ஏ.அயூப்கான் (த/பெ. அமானுல்லா), ஏ.அகமது அஸ்லம் (த/பெ. முகமது புகாரி) ஆகியோர் டிரஸ்டியாக தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர் சே. முகமது அஸ்லம் முன்னிலையில் நியமண ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தஞ்சாவூர் வக்ஃப் ஆய்வாளர் ஹைதர் அலி (பொ) முன்னிலையில், புதிய நிர்வாகிகளின் கூட்டம் தக்வா பள்ளிவாசல் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், நிர்வாகக் கமிட்டித் தலைவராக ஹாஜி எம்.எஸ். ஷிஹாபுதீன் (த/பெ. ஷம்சுதீன் ஹாஜியார்), செயலாளராக எஸ். முகமது ஜமீல் (த/பெ. ஷேக் அப்துல் காதர்), பொருளாளராக எம்.சாகுல் ஹமீது (த/பெ. முகைதீன்) ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
இதையடுத்து, புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி முகமது அபூபக்கர், தக்வா பள்ளிவாசல் தலைமை இமாம் முகமது தமீம் ஆலிம், துணை இமாம் ஹாபீஸ் கலீல் ரஹ்மான் மற்றும் மஹல்லாவாசிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.