.

Pages

Sunday, March 3, 2019

TNPSC Group-I போட்டித்தேர்வு: ஆட்சியர் ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில்   நடைபெற்ற  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி– I க்கான ( Group-I ) முதன்மை தேர்வு பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (03.03.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்விற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது; 
தேர்வு கண்காணிப்பில் ஈடுபடும் அலுவலர்கள் கவனமாக பணியாற்றவும், 100 சதவிகிதம் தவறுகள் நடைபெறாமல் கண்காணிக்கவும், தேர்வு எழுதுபவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு 5636 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.  இன்று நடைபெற்ற தேர்வில் 4124 நபர்கள் தேர்வு எழுதினர். 1512 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை.  73.1 சதவிகித நபர்கள் இத்தேர்வு எழுதினார்கள்.

தேர்வு தொடங்கிய அரை மணி நேரத்திற்கு பின்னர் தேர்வர்கள் யாரையும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும், தேர்வர்கள் எவரும் செல்போன், ஐபேட், கால்குலேட்டர், டேபிளேட் மற்றும் அதிநவீன மின்னணு சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட  ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.