ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில், கஜா புயல் மறுவாழ்வு திட்டம் ~ 2019 ன் கீழ், புயலால் சேதமடைந்த 107 வீடுகள் புனரமைத்து பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் ஏ.எல் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அவ்வமைப்பின், மாநில பொதுச்செயலாளர் ஏ. முகமது ஹனீபா மன்பஈ, மாநிலச் செயலாளர் டி.ஏ பசிர் அகமது ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர், கஜா புயலால் சேதமடைந்த அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, ராஜாமடம், கூடலிவயல், மல்லிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 54 வீடுகள் புனரமைத்து பயனாளிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், 30 மீனவக் குடும்பங்களுக்கு மீன் பிடி வலைகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், ஏ.எல் பள்ளித் தாளாளர் அப்துல் ரெஜாக், திருவாரூர் மாவட்டம், கற்பகநாதர் குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ஜி. செந்தில், அதிரை அகமது, வழக்குரைஞர் நிஜாமுதீன், ஜலாலுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பகுதி பொறுப்பளார் எஸ்.ஜெ சேக் செய்திருந்தார்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் ( மாணவச் செய்தியாளர்)
அருமையான பணி. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் க்கு நன்றிகள். மேன்மேலும் இதைப்போன்ற பணிகள் தொடரட்டும்.
ReplyDelete