தஞ்சாவூர் மாவட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது :
இந்திய தேர்தல் ஆணையத்தால் 10.03.2019 அன்று நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளன.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் மன்னார்குடி ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர்; சட்ட மன்ற தொகுதிகள் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெறுகின்றன.
தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் 286 வாக்குச்சாவடி மையங்களும், 1,30,852 ஆண் வாக்காளர்களும், 1,40,892 பெண் வாக்காளர்களும், 55 இதர பாலித்தனவரும் உள்ளனர்.
திருவையாறு சட்ட மன்ற தொகுதியில் 307 வாக்குச்சாவடி மையங்களும், 1,24,713 ஆண் வாக்காளர்களும், 1,28,991 பெண் வாக்காளர்களும், 4 இதர பாலித்தனவரும் உள்ளனர்.
ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்களும், 1,12,244 ஆண் வாக்காளர்களும், 1,16,635 பெண் வாக்காளர்களும், 5 இதர பாலித்தனவரும் உள்ளனர்.
பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் 271 வாக்குச்சாவடி மையங்களும், 1,11,419 ஆண் வாக்காளர்களும், 1,20,049 பெண் வாக்காளர்களும், 21 இதர பாலித்தனவரும் உள்ளனர்.
பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் 260 வாக்குச்சாவடி மையங்களும், 1,03,450 ஆண் வாக்காளர்களும், 1,05,929 பெண் வாக்காளர்களும், 6 இதர பாலித்தனவரும் உள்ளனர்.
மன்னார்குடி சட்ட மன்ற தொகுதியில் 282 வாக்குச்சாவடி மையங்களும், 1,21,289 ஆண் வாக்காளர்களும், 1,26,818 பெண் வாக்காளர்களும், 6 இதர பாலித்தனவரும் உள்ளனர்.
தஞ்சாவ10ர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட் 6 சட்ட மன்ற தொகுதிகளில் 1691 வாக்குச்சாவடி மையங்களும், 7,03,967 ஆண் வாக்காளர்களும், 7,39,314 பெண் வாக்காளர்களும், 97 இதர பாலித்தனவர் என மொத்தம் 14,43,378 வாக்காளர்கள் உள்ளனர்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடி மையங்களும், 1,20,701 ஆண் வாக்காளர்களும், 1,20,079 பெண் வாக்காளர்களும், 14 இதர பாலித்தனவரும் உள்ளனர்.
கும்பகோணம் சட்ட மன்ற தொகுதியில் 287 வாக்குச்சாவடி மையங்களும், 1,25,377 ஆண் வாக்காளர்களும், 1,29,554 பெண் வாக்காளர்களும், 3 இதர பாலித்தனவரும் உள்ளனர்.
பாபநாசம் சட்ட மன்ற தொகுதியில் 300 வாக்குச்சாவடி மையங்களும், 1,20,539 ஆண் வாக்காளர்களும், 1,23,505 பெண் வாக்காளர்களும், 10 இதர பாலித்தனவர் என தஞ்சாவூர் மாவட்டத்திலும்,
தஞ்சாவூர் மாவட்டத்தில் 11,995 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் அடையாளப்படுத்துவதற்கான குறியீடுகள் வாக்காளர் பட்டியலில் தனி குறியீடு இடப்பட்டு வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான சக்கர நாற்காலி, சாய்வு தளம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 102 பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் திருவிடைமருதூரில் 13 வாக்குச்சாவடிகளும், கும்பகோணம் 12 வாக்குச்சாவடிகளும், பாபநாசம் 11 வாக்குச்சாவடிகளும், திருவையாற்றில் 10 வாக்குச்சாவடிகளும், தஞ்சாவூரில் 15 வாக்குச்சாவடிகளும், ஒரத்தநாட்டில் 17 வாக்குச்சாவடிகளும், பட்டுக்கோட்டையில்13 வாக்குச்சாவடிகளும், பேராவூரணியில் 11 வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டு தேவையான கூடுதல் பாதுகாப்பு வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 8 சட்ட மன்ற தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டு காலை, மாலை, இரவு என சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ள 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல் நிலையான கண்காணிப்பு குழு 8 சட்ட மன்ற தொகுதிகளும் தொகுதிக்கு ஒரு நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு காலை, மாலை, இரவு என சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ள 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே வீடியோ கண்காணிப்பு குழு 8 சட்ட மன்ற தொகுதிகளும், தொகுதிக்கு ஒரு வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மேற்கொள்ளும் பதிவுகளை கண்காணிக்க 8 வீடியோ பார்வைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
8 சட்ட மன்ற தொகுதிகளுக்கு, தொகுதி வாரியாக வேட்பாளர்களின் செலவு கணக்குகளை பார்வையிட 8 உதவி செலவின தேர்தல் பார்வையாளர்கள் அமைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் தொடர்பான மாவட்ட தொடர்பு மையம் செயல்பட்டு வருகிறது. கட்டணமில்லா தொலைபேசி எண் 1950ல் தொடர்பு கொண்டு வாக்காளர்கள் வாக்காளர்பட்டியலில் தங்களது விவரங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தேர்தல் தொடர்பான புகார்களையும் தெரிவிக்கலாம். கைபேசி மூலம் அழைப்பவர்கள் மாவட்ட தொலைபேசி குறியீட்டு (04362) எண்ணுடன் சேர்த்து 1950 அழைக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் மூலம் ஊ ஏபைடை என்ற செயலியை பயன்படுத்துவதற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலி மூலமாக தங்கள் பகுதியில் நடைபெறும் தேர்தல் தொடர்பான விதிமீறல்களை வீடியோ மற்றும் புகைப்படத்துடன் எடுத்து அனுப்பலாம். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தொடர்புடைய நபருக்கு பதில் அனுப்பப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்துää மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு மற்றும் விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து செய்தியாளர்களுக்கு செய்முறை மூலம் விளக்கி கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர், தேர்தல் விதிமுறைகள் குறித்து அச்சக உரிமையாளர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்காக அச்சிடப்படும் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டி ஆகியவற்றை முன் அனுமதி பெற்ற பின்னரே அச்சிட வேண்டுமெனவும், அவ்வாறு அச்சிடும் போது அச்சகத்தின் பெயர், முகவரி, அனுமதி எண், தொடர்பு எண் ஆகியவற்றை சேர்த்து அச்சிட வேண்டும். உச்ச நீதி மன்ற உத்தரவின்படி விளம்பர தட்டிககள் மற்றும் பதாகைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.