பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் மார்ச் 29ந் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பு ரயிலை பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்படுவதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை இடையிலான ரயில் வழித்தடத்தில் வரும் மார்ச் 26 ந் தேதி முதல் மார்ச் 29 வரை தென்மண்டல (பெங்களூரு) ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்த உள்ளார். மேலும், வரும் மார்ச் 29 (வெள்ளிக்கிழமை) பட்டுக்கோட்டை ~ திருவாரூர் இடையிலான ரயில் பாதையில், சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. எனவே, காலை 10 மணி முதல் 5 மணி வரையில் பொதுமக்கள் யாரும் இந்த வழித்தடத்தில் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்கள தெரியப்படுத்தும்
ReplyDeleteஅதிரை நியூஸ்க்கு மனமார்ந்த
நன்றி நன்றி நன்றி🌹🌹🌹