பேராவூரணி மார்ச்.21-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 1000 பேர், நூறு சதவீத வாக்குப்பதிவு மற்றும் நேர்மையான முறையில் வாக்களிக்க வலியுறுத்தி தங்களது பெற்றோர்களுக்கு அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதினர்.
தேர்தல் ஆணையம் நூறு சதவீத வாக்குப்பதிவு நடக்க வேண்டும். பரிசுப் பொருட்களோ, பணமோ பெறாமல் வாக்காளர்கள் நேர்மையான முறையில் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளி மாணவர்கள் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து, தங்கள் பள்ளி தாளாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது ஆலோசனைப்படி, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கடிதம் எழுத முடிவு செய்தனர்.
இந்நிலையில் அஞ்சல் அட்டையில், பெற்றோர்களுக்கு கடிதம் எழுதும் நிகழ்ச்சி குமரப்பா பள்ளி விழா அரங்கில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி தலைமை வகித்துப் பேசினார். குமரப்பா பள்ளி தாளாளரும், மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளருமான டாக்டர் ஜி.ஆர்.ஸ்ரீதர் முன்னிலை வகித்து, மாணவ, மாணவிகளைப் பாராட்டிப் பேசினார். தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் யுவராஜ், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், அஷ்ரப் அலி, நகர வர்த்தக கழக பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, ஆசிரியர்கள் விஜய், மூர்த்தி, நந்தினி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மாணவ, மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிறைவாக பள்ளி முதல்வர் ஆர். சுரேஷ் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.