.

Pages

Sunday, March 3, 2019

பேராவூரணி அருகே அரிய வகை கடல்பசு வெட்டி விற்பனை செய்த மீனவர் கைது!

பேராவூரணி மார்ச்.03-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, பிடிக்க அரசால்  தடை செய்யப்பட்ட அரிய வகை கடல்பசுவை வெட்டி விற்பனை செய்த மீனவரை கடலோர காவல்துறையினர் பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.

இதுபற்றி கூறப்படுவதாவது, 
"தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மந்திரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் அடைக்கலம் (வயது 25).இவர் சேதுபாவாசத்திரம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, இவரது வலையில் அவுரியா எனப்படும் அபூர்வ வகை கடல் வாழ் உயிரினமாக கடல்பசு சிக்கியது. கடல்பசு வலையில் சிக்கினால் அதை மீனவர்கள் உயிருடன் கடலுக்குள் விட்டு விடுவது வழக்கம். பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் அரிய வகை உயிரியினமான கடல்பசுவை  பிடிக்க அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடல்பசுவை கரைக்கு கொண்டு வந்த மீனவர் அடைக்கலம், அதை வெட்டி துண்டுகளாக்கி விற்பனை செய்வதாக கடலோர காவல்துறை ஆய்வாளர் சுபாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோரக் காவல்துறையினருடன் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், கடல்பசு இறைச்சி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மீனவர் அடைக்கலத்தை பிடித்து, பட்டுக்கோட்டை வனத்துறையினரிடம் கடலோரக் காவல்துறையினர் ஒப்படைத்தனர். மேலும் கடல்பசு இறைச்சியை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன் மகன் கணேசனை தேடி வருகின்றனர். மீனவர் அடைக்கலத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர் மதுமகேஷ் கூறுகையில், "ஆவுரியா எனப்படும் கடல்பசு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை பிடிப்பதும், விற்பனை செய்வதும், இறைச்சியை வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்" என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.