தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (23.03.2019) நேரில் ஆய்வு செய்தார்.
பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் சுப்பிரமணிய கோயில் தெருவில் அமைந்துள்ள பதட்டமான வாக்குச்சாவடியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அங்கு வசிக்கும் பொது மக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் குப்பதேவன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, செம்பியமாதேவிபட்டினம் மீனவ தெருவில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொது மக்களிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கு வாக்களிப்பின் போது ஏதேனும் சிரமங்கள் உள்ளனவா என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர், பட்டுக்கோட்டை வேளாண்மைத்துறை விற்பனைக் குழு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
அதன் பின்னர், தஞ்சாவூர் திலகர் திடலில் நகர் பகுதியில்வுள்ள 1500 ஆட்டோகளில் முதற்கட்டமாக 150 ஆடோகளில் நேர்மையாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒட்டினார். மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் பயனிகளிடம் ஏப்ரல் 18 அன்று கட்டாயம் வாக்குளிப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துறைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார்.
தொடர்ந்து ராஜராஜன் மணிமண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட துறை சார்பில் அங்கன்வாடி பணியாளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு எற்படுத்திட அகல்விளக்கு ஏற்றியும் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட கும்மிப்பாட்டு பாடி கும்மி ஆட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட சுற்றுலா அலுவலர் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.