தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (11.03.2019) கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: -
இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற பொது தேர்தலின் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவ்வித மீறலும் இன்றி பின்பற்ற வேண்டும். சாதி, மதம், இனம், மொழி சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்துதல், பிற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் தனி வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்தல், மத வழிபாட்டு தலங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தனியார் இடங்களில் முன் அனுமதியின்றி கொடி கம்பங்கள் நடுதல், பதாகைகள் வைத்தல், சுவரொட்டிகள் ஒட்டுதல், பரப்புரை வாசகங்கள் எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு முன் கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். பிரச்சாரத்தின் போது, பொது மக்களை பாதிக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், கூடுதல் காவல் கண்காணிபாளர் பாலச்சந்தர் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைப்பறை மற்றம் வாக்கு எண்ணப்படும் அறைகள் ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.