அதிராம்பட்டினம், மார்ச்.19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 64-வது கல்லூரி நாள் விழா நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரிச்செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் கல்லூரி ஆண்டரிக்கை வாசித்தார்.
விழாவில், தஞ்சை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் டி.அறிவுடைநம்பி கலந்துகொண்டு பேசியது;
மாணவ, மாணவிகள் எத்தகைய இடையூறு வந்தாலும் மனம் தளராமல் முயற்சி செய்து இலக்கை அடைய வேண்டும். நீங்கள் எதிர்காலத்தில் என்னாவாக வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும். அப்படி நீங்கள் தீர்மானிப்பதற்கு தன்னம்பிக்கையும், கடின உழைப்பையும் மேற்கொண்டால் நீங்கள் எந்த பொறுப்பையும் எதிர்காலத்தில் எட்டமுடியும்' என்றார்.
சிறப்பு விருந்தினராக பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் கலந்துகொண்டு பேசிய கல்லூரி நாள் விழா உரையில்;
உலகம் பயன்பட, உலகம் உயர ஒரு இன்சாவது ஏதாவது பயன்பட்டால்தான் அவர்களை இந்த மனித சமூகம் மதிக்கும். நாமும் ஏதாவது ஒரு விசயத்தில் சாதித்து காட்டவேண்டும். இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண்மணி மேரி கியூரி. இவர், தான் கண்டுபிடித்த கனிமத்திற்கு வைத்த பெயர் போலேனியம். அந்த பெண்மணியின் ஊர் போலந்து தேசம். நாம் பிறந்த ஊரை இந்த கனிமத்தை உச்சரிக்கிற போதெல்லாம் என்னுடைய ஊர் பெயர் நியாபகத்துக்கு வரவேண்டும் என்று சொன்னால், நாமும் அதுபோன்று ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிப்போம். அதற்கு தமிழ் என்று பெயர் சூட்டுவோம். நோபல் பரிசு என்ன அதற்கு மேலும் சாதிப்போம் வானமே எல்லை என்பது இனிமேல் இல்லை' என்றார்.
மேலும், கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் நூறு சதவிகிதம் கல்லூரிக்கு வருகை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியை பேராசிரியர்கள் ஐ. முகமது நாசர், எம்.கமருன் நிஹார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழா முடிவில், கல்லூரி துணை முதல்வர் எம். முகமது முகைதீன் நன்றி கூறினார்.
இவ்விழாவில், கல்லூரி துணை முதல்வர் எம்.நாசர், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப்பணியாளர்கள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.