தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் திங்கட்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரிச்செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து, உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வரவேற்று, கல்வி அறிக்கை, பட்டமளிப்பு உறுதிமொழி ஆகியவற்றை வாசித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி டி. பழனி கலந்துகொண்டு 339 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்திப் பேசியது;
'திட்டமிட்டு பயணித்தால் வெற்றியை இலகுவாக அடைய முடியும். மாணவர்கள் நூலகம் செல்வதிலும், விளையாட்டு மைதானத்தில் அதிக நேரம் செலவிடுதலிலும் அதிக ஆர்வம் கொள்ள வேண்டும். உடலை சரியாக வைத்திருக்கவில்லையென்றால் எதிலும் நாம் வெற்றி அடைய முடியாது.
இன்றைய தலைமுறையின் பெற்றோர்கள் துரதிர்ஷ்டசாலிகள். தம் பிள்ளைகள் தன் கண்முன்னே இறக்கக்கூடிய சந்ததியை பார்க்கின்ற மிகக்கொடூரமான சூழ்நிலையை அடைகின்றனர். ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்களும், முறையான உடற் பயிற்சிமின்மையும் உயிரிழக்க காரணமாக அமைகின்றன. எனவே, மாணவர்கள் அனைவரும் இன்று முதல் உங்கள் வாழ்க்கையை அகம் ~ புறம் என பிரித்து, அகம் என்றால் வாசித்தலிலும், புறம் என்றால் விளையாட்டுத்திடலில் செலவழிப்பதிலும் உங்கள் வாழ்கையை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும்' என்றார்.
விழாவில், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப்பணியாளர்கள் மாணவிகள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.









No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.