தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டையில் தேர்தல் பணி அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (13.03.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பணி அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெறவுள்ளதையொட்டி பள்ளிக் கட்டிடம் மற்றும் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான பிற வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். பயிற்சியின் போது அலுவலர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய செய்முறை விளக்கம் மற்றும் இதர பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தேர்தல் பயிற்சிக் கூட்டம் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். மேலும், பேராவூரணி அரசுபெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார்.
முன்னதாக பேராவூரணி வட்டம், பிள்ளையார் திடல் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளின் போது, பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள்பிரகாசம் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.