திருச்சி, மார்ச். 05
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் வரும் மார்ச் 31 க்குள் நடைபெரும் சோதனை ஓட்டத்துக்கு பின், தாமதமின்றி உடனடியாக ரயில் போக்குவரத்து சேவையை தொடங்கவும், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களை கூடுதலாக இயக்கவும், இந்த வழித்தடத்தில் இயங்கும் விரைவு ரயில்களில் கூடுதல் கோச் இணைக்கவும், சென்னை ~ காரைக்குடி மார்க்கத்தில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து ரயிலை இயக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையிலிருந்து கடற்கரைத்தெரு வழியாக ரயில் நிலையம் வரை செல்லும் சுமார் 800 மீட்டர் நீளமுள்ள பழுதடைந்த சாலையை புதிதாக அமைத்துதரக் கோரியும், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் எம்.பி தலைமையில், சமூக ஆர்வலர்கள் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன், ஹாஜி அப்துல் ரெஜாக், ஹாஜி ஃபத்ரூத்தீன், ஹாஜி சேக் முகமது, சேக்கனா எம்.நிஜாமுதீன், ஏ.சாகுல் ஹமீது (மணிச்சுடர்) ஆகியோர் தெற்கு ரயில்வே திருச்சி மண்டல வர்த்தகப்பிரிவு கூடுதல் மேலாளர் சி.ஆர் ஹரீசை இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது ரயில்வே அதிகாரி பிரசன்னா மற்றும் பலர் உடனிருந்தனர்.
முன்னதாக, இதுதொடர்பாக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் எம்.பி ஏற்பாட்டின் பேரில், சமூக ஆர்வலர்கள் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன், ஹாஜி அப்துல் ரெஜாக் ஆகியோர் டெல்லி சென்று ரயில்வே துறை அமைச்சகத்தில் உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் எம்.பி கூறியது (வீடியோ);

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.