பேராவூரணி மார்ச்.23-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரங்களில் பிரபலமானது மொய்விருந்து சம்பவம். திருமணம், காதணி விழா, புதுமனை புகுவிழா இதுபோன்ற விழாக்களுக்கு வருவோர், மொய் பணம் தந்து செல்வது வழக்கம். இதற்காக மொய்விருந்து விழா என தனியாக நடத்தப்படுவதுண்டு.
தஞ்சாவூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை ஆலோசனையின் பேரில், நேர்மையான மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அன்று மாலை "தேர்தல் விழிப்புணர்வு மொய்விருந்து விழா" நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, விவிபேட் எந்திரத்தில், மாதிரி சின்னங்களில் வாக்களித்து, தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என அறிந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு சந்தனம், பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டு, தேநீர் விருந்தும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியர் அ.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, பேரூராட்சி தலைமை எழுத்தர் வீ.சிவலிங்கம், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் யுவராஜ், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் அஷ்ரப் அலி, சுப்பிரமணியன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் தர்ஷனா, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியர் அ.கமலக்கண்ணன், "மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக வரும் மார்ச் 25 திங்கள்கிழமை அன்று மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் படகுப்போட்டி நடத்தப்பட உள்ளது" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.