.

Pages

Tuesday, March 26, 2019

அரசுப் பள்ளியைத் தத்தெடுத்த முன்னாள் மாணவர்!

தஞ்சாவூர் மார்ச்.26-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே முன்னாள் மாணவரான டாக்டர் ஒருவர் தான் படித்த அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ளார்.

பேராவூரணி அருகே உள்ளது, பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் தன் தொடக்கக் கல்வியை பயின்றவர் டாக்டர் து.நீலகண்டன். பிரபல எலும்பு முறிவு மருத்துவரான இவர் தான் படித்த ஆரம்பப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ முடிவு செய்தார். இவரது மனைவி புவனேஸ்வரி கணவரின் கனவை நனவாக்க ஒத்துழைப்பு தந்தார். இவரது மேற்பார்வையில் முதல் கட்டமாக ரூ 2 இலட்சத்தில் பள்ளி வகுப்பறை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பணிகள் முடிவடைந்து சீரமைக்கப்பட்ட வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. பள்ளியைத் தத்தெடுத்து ரூ.2 லட்சம் செலவில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை, மேசை, நாற்காலி, வகுப்பறைக்கு டைல்ஸ், நூலக புத்தகங்களை வைக்க அலமாரி, கணினி  ஆகியவற்றை டாக்டர் து.நீலகண்டன் வழங்கினார். வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வகுப்பறைகளை சீரமைத்து தருவதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரெ.பரமசிவம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் வீரம்மாள் வரவேற்றார். டாக்டர் து.நீீலகண்டன் சீரமைக்கப்பட்ட பள்ளி வகுப்பறையைத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகேசன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம், நாடிமுத்து, அம்பிகாவதி, வீரையன், ஜெயா, செல்வராணி, ரமேஷ், பள்ளி ஆசிரியைகள் காந்திமதி, ஜெயந்தி, குளோரி, துர்காதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் செ.ராமநாதன் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.