.

Pages

Monday, March 18, 2019

அதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் புதியதோர் உதயம் 'அல்~ஹுதா கம்ப்யூட்டர்ஸ்' (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர்கள் எச்.சாகுல் ஹமீது, எஸ். மர்ஜூக் அகமது, எஸ்.அன்வர் உசேன். நண்பர்களான இவர்கள், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் (காதிர் முகைதீன் கல்லூரி எதிரில்) 'அல்~ஹுதா கம்ப்யூட்டர்ஸ்' என்ற பெயரில் புதிதாக ஆன்லைன் சேவை மையத்தை தொடங்கி உள்ளனர். இதன் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

விழாவில், கலந்துகொண்டு வாழ்த்திய பிரமுகர்கள் அனைவரையும் 'அல்~ஹுதா கம்ப்யூட்டர்ஸ்' ஆன்லைன் சேவை மைய உரிமையாளர்கள் அன்புடன் வரவேற்றனர்.

இதுகுறித்து ஆன்லைன் சேவை மைய உரிமையாளர்கள் கூறியது;
எங்களது சேவை மையத்தில் புதிய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு போன்றவற்றை புதிதாக விண்ணப்பிக்க / திருத்தங்கள் செய்ய, பஸ், ரெயில், விமானம் ஆன்லைன் டிக்கெட், ரீசார்ஜ், மின்சார கட்டணம், டெலிபோன் கட்டணம் செலுத்துதல், சிறுதொழில் பதிவு, வேலை வாய்ப்பு பதிவு, ஜி.எஸ்.டி சேவை, காணாமல் போன ஆவணங்கள் பதிவு, பத்திரப்பதிவு கணினி கட்டணம் செலுத்துதல், டிரைவிங் லைசன்ஸ் பதிவு, டோல்கேட் கார்டு, கார் பைக் இன்சூரன்ஸ், மொபைல் ரீ சார்ஜ், பே டிம், மணி டிரான்ஸ்பர் உள்ளிட்ட சேவைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படுகின்றன. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றனர்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு
04373 241123 / 944 55 66 581



 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.