.

Pages

Monday, March 11, 2019

காரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு ரயில் இயக்க கோரிக்கை (படங்கள்)

பட்டுக்கோட்டை, மார்ச் 11
காரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு இர‌யி‌ல் வசதியினை செய்துதர பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர் எம்.எல்.ஏ தலைமையில் ரயில்வே உயர் அதிகாரியுடம் கோரிக்கை.

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் எம்.எல்.ஏ தலைமையில், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத் தலைவர் என். ஜெயராமன் செயலாளர் வ. விவேகானந்தம், துணை தலைவர் கா. லெட்சுமிகாந்தன், பட்டுக்கோட்டை அனைத்து ஜமாத்தார்கள் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஏ. முகம‌து இலியாஸ், தஞ்சை மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்க தலைவர் ஏ. அமானுல்லா, பட்டுக்கோட்டை பைத்துல்மால் நிர்வாகிகள் வி.ஏ.ஜாபர்சாதிக், ஏ. சாகுல்ஹமீது, ஏ. சாதிக் அலி ஆகியோர் திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் ஏ. உதயகுமார்ரெட்டியை அவரது அலுவலகத்தில் இன்று 11.03.2019 திங்கட்கிழமை காலை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

கோரிக்கை மனுவில், காரைக்குடியிலிருந்து சென்னைக்கு விரைவில் விரைவு இர‌யி‌ல் வசதியினை செய்துதரவும், பட்டுக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் உள்ள லெவல் கிராசிங் கேட் எல்.சி. 94 க்கு தரைவழிப்பாலத்தினை  விரைவில் அமைத்துதர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் சென்னையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு இத்தடத்தில் இரண்டு மாதங்களுக்குள் விரைவு இர‌யி‌ல் இயக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும், எல்.சி 94 தரைவழிப்பாதை அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.