படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் பத்து இலட்சம் வரை கடனுதவி பெற மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் தொடங்க உள்ள தொழில்களில் உற்பத்தி பிரிவின்கீழ் ரூ.10 இலட்சம் வரையிலும் சேவைப்பிரிவில் ரூ.5 லட்சம் வரையிலும், வியாபாரங்களுக்கு ரூ.5 இலட்சம் வரையிலும் உள்ள கடன் திட்டங்களுக்கு வங்கிகள் மூலம் தொழிற்கடன் பெறலாம். திட்ட பயனாளிகளுக்கு அரசு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு அதாவது அதிகபட்சமாக ரூ.1,25,000/- வரை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்தபட்சம் 8 ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். வயது வரம்பு பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயது வரையிலும் இருத்தல் அவசியம் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,25,000/- முதல் ரூ.5,00,000/- வரை இருத்தல்வேண்டும். திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்,முன்னாள் இராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் தமது பங்காக செலுத்த வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்ஜினியரிங் ஒர்க்ஸ், மர பர்னிச்சர்கள் தயாரிப்பு, பேப்பர் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, கயிறு பொருட்கள் தயாரிப்பு, இருசக்கர வாகனம் பழுதுபார்ப்பு, கம்ப்யூட்டர் சென்டர், மளிகைக் கடை, பேப்பர் மார்ட், எலக்ட்ரிக்கல் கடை, மருத்துவ ஆய்வகம் போன்ற தொழில்களை, லாபகரமாக இத்திட்டத்தின்கீழ் அமைத்திடலாம்.
இத்திட்டத்தின்மூலம் பயனடைய விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேற்கூறிய திட்டத்தில் கடன்பெற விரும்புவோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட உரிய இணையதளத்தில் பதிவுசெய்து விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் இணைத்து பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் -6 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. (தொலைபேசி எண்.04362-257345, 255318)

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.