அதிராம்பட்டினம், நவ.14
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட வண்டிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது ஆலடிக்குளம். தற்போது, பம்பிங் நீர், ஆற்று நீர் வரத்து அதிகரித்ததால் குளத்தில் நீர் நிரம்பிக் காணப்படுகிறது. இக்குளத்தின் வடிகால் தூர்ந்து போனதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக குளத்தில் நிரம்பிய நீர் வெளியேற முடியாமல் அருகில் உள்ள ஆலடித்தெரு குடியிருப்பு பகுதியில் புகுந்துவிடும் அபாயம் நிலவியது.
இந்நிலையில், இப்பகுதி பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் பேரில், ஆலடிக்குளத்தில் நீர் நிரம்பிய பின், அதன் அருகில் உள்ள ஆணையாங் குளத்துக்கு நீரை கொண்டு செல்லும் வகையில், அதன் வழித்தட பாதையை புனரமைக்கும் பணியில், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம், முன்னாள் கவுன்சிலர்கள் சிவக்குமார், உதயகுமார், ஹாஜா பகுருதீன், முருகானந்தம், செல்வம் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதற்காக, ஆணையாங்குளம் ~ ஆலடிக்குளம் இடையே சுமார் 300 மீட்டர் நீளம் கொண்ட தூர்ந்து போன வடிகால் வாய்க்காலை வருவாய்துறை அதிகாரிகள், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலர்கள் உதவியோடு அளவீடு செய்து, ஜே.சி.பி வாகனத்தைக் கொண்டு தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாள்களாக நடந்து வந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து ஆலடிக்குளம் வடிகாலில் இருந்து ஆணையாங்குளத்துக்கு இன்று வியாழக்கிழமை நீர் வரத்தொடங்கியது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, மழை காலங்களில் ஆணையங் குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படும். காலப்போக்கில் ஆக்கிரமிப்பாலும், கொட்டப்படும் குப்பைக் கழிவுகளாலும் குளம் இருக்கும் இடமே பலருக்கு தெரியாத நிலை ஏற்பட்டது. இக்குளத்தை சுற்றிக்காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரி, பொதுமக்கள் நீராடும் வகையில், குளத்தின் பெரும்பகுதியில் படர்ந்துள்ள வெங்காயத் தாமரைகளை அகற்றுவதற்கு உரிய துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்திகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.