.

Pages

Tuesday, November 26, 2019

அதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் ~ உறுப்பினர்கள் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் 25.11.2019 அன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்து, வரவேற்றுப் பேசினார். செயலாளர் எம்.நிஜாமுதீன், நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், அரிமா சங்க மாவட்டத் தலைவர்கள் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், சங்க இயக்குநர் பேராசிரியர் முருகானந்தம், நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது, டி.பி.கே ராஜேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தில், அரிமா சங்கம் சார்பில் நடப்பாண்டில் 2-வது முறையாக அதிராம்பட்டினத்தில், கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றபட்டன. சிறந்த சேவைக்காக, அரிமா சங்க துணைத் தலைவர்கள் என்.யூ ராமமூர்த்தி, பங்கு தந்தையர் ஜோக்கப் செல்வராஜ் ஆகியோருக்கு, நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டன.

முன்னதாக, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் வரவேற்றுப் பேசினார். செயலாளர் சேக்கனா எம். நிஜாமுதீன் மாதாந்திர அறிக்கை வாசித்து, நிறைவில், நன்றி கூறினார்.

கூட்டத்தில், அரிமா சங்க மாவட்டத்தலைவர்கள் எம்.அகமது, எம்.சாகுல் ஹமீது, அதிராம்பட்டினம் அரிமா சங்க இயக்குநர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது,  ஆர். செல்வராஜ், அரிமா சங்க நிர்வாகிகள் பிச்சமுத்து, எம். முகமது அபூபக்கர், எம். அப்துல் ரஹ்மான், முல்லை ஆர்.மதி, என். உதயகுமார், முகமது அப்துல்லா, குப்பாசா அகமது கபீர், பி.உமா சங்கர், எஸ்.அகமது ஜுபைர், வரிசை முகமது உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.