.

Pages

Thursday, November 28, 2019

அதிராம்பட்டினத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி அதிராம்பட்டினத்தில், இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தலைமை வகித்து, டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசினார். பின்னர், அதிராம்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காவல் நிலையம் ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, டெங்கு தடுப்பு வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார். 

பேரணி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் தொடங்கி, பட்டுக்கோட்டை சாலை, ஆஸ்பத்திரி தெரு, ஈஸ்ட் கோஸ்ட் சாலை வழியாகச் சென்று பேரூராட்சி அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.

இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், பட்டுக்கோட்டை நகராட்சி டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, டெங்கு கொசு உருவாவதைத் தடுப்போம், குப்பைகளை சாலைகளிலும், கால்வாய்களிலும் கொட்டாதீர்கள், நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்போம், மழை நீரை சேகரிப்போம் என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திவாறு, பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.

பேரணி புறப்படுவதற்கு முன்னதாக, ஏடிஸ் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

பின்னர், அதிராம்பட்டினம் பேரூர் பகுதிகளில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் பட்டுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் ரஞ்சித் தலைமையில், தாமரங்கோட்டை, ராஜாமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

முன்னதாக, தாமரங்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர். அண்ணாதுரை வரவேற்றுப் பேசினார். நிறைவில், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பி.சுப்பிரமணியன், அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.