தஞ்சாவூர் நவ.12-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகத்தால் நடப்பட்ட மரக்கன்றுகள் செழித்து வளர்ந்து வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, கொரட்டூர் அருகில் உள்ள பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவில் செம்மரம், ஆப்பிரிக்கன் தேக்கு, வேம்பு, கோங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. அவற்றிற்கு கூண்டு, வேலி அமைத்து தண்ணீர் விட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
மரக்கன்றுகள் செழித்து வளர்ந்த 6 மாதங்களைக் கடந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் மரக்கன்றுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் முழுவதும் சேதமடைந்த மரக்கன்றுகளை மீண்டும் நட்டு, கவாத்து செய்து பராமரிப்பு செய்தனர். ஓராண்டு கழிந்த நிலையில் தற்போது மரக்கன்றுகள் செழித்து வளர்ந்துள்ளது.
இதேபோல், நீர்மேலாண்மைத் திட்டத்தின் கீழ் சில மாதங்களுக்கு முன்பு, பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும், தனியார் பங்களிப்புடன் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பேரூராட்சி செயல் அலுவலர் மு.மணிமொழியன், தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் மேற்பார்வையில் பள்ளிகள், சாலையோரங்கள், பொது இடங்கள், கடைவீதி, தனியார் வீடுகள் ஆகியவற்றில் தனியார் பங்களிப்புடன் நடப்பட்டது. தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக மரக்கன்றுகள் நன்றாக துளிர் விட்டு வளர்ந்து வருகிறது. பேரூராட்சியின் மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு பாராட்டி சென்றுள்ளார்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மு.மணிமொழியன், தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் ஆகியோர் தெரிவித்ததாவது,
"உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டியும், நீர் மேலாண்மை திட்டத்தின் கீழும் நடப்பட்ட ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளில், ஏறத்தாழ 70 சதவீதம் செழித்து வளர்ந்து உள்ளது. கால்நடைகள் கடித்து வீணாகியது, பட்டுப் போனது போன்றவை தவிர்த்து பெரும்பாலும் நன்றாக உள்ளது. இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் நகரே சோலை வனமாக மாறும் நிலை உள்ளது.
எதிர்காலத்தில் மழைவளம் சிறக்கவும், தூய்மையான காற்று கிடைக்கவும் மரம் வளர்ப்பு உதவியாக இருக்கும். பொது இடங்களில் உள்ள செடிகளை பாதுகாப்பதில் பொதுமக்கள் அக்கறை காட்ட வேண்டும். மேலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை தங்கள் வீடுகள், வணிக வளாகங்களில் ஏற்படுத்த பொதுமக்கள் தாமாகவே முன்வர வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரை நாம் விட்டுச் செல்ல வேண்டும்" என்றனர்.
பேரூராட்சி நிர்வாகத்தின் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.