.

Pages

Tuesday, November 26, 2019

திமுக சார்பில் அதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளின் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 27 பேர் விருப்ப மனு!

அதிராம்பட்டினம், நவ.26
வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூராட்சி 1 முதல் 21 வார்டுகள் வரையிலான கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுகவை சேர்ந்த 27 பேர் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.

திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில், அக்கட்சியை சேர்ந்த ஏ.எம்.ஒய் அன்சர்கன், முகமது இப்ராஹீம், எம்.முகமது சரீப், எஸ்.எம். ஜி பசூல்கான், மீராஷா. பகுருதீன், என்.ஏ முகமது யூசுப், முகமது சைபுதீன், கே.இத்ரீஸ் அகமது, நூர் முகமது, அகமது ஹாஜா, ஏ.முகமது முகைதீன், எம்.நூர் முகமது (நூவண்ணா), கன்சூல் முகமது, முத்துராமன், குமரவேல், ராஜா, சண்முகவேல், ராமசாமி, சுப்பிரமணியன், ஜெயராமன் உள்ளிட்ட 27 பேர், அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் இறைவன், எல்.ஜி அண்ணா, கா. அண்ணாதுரை, து.செல்வம், லண்டன் கோவிந்தராஜ் ஆகியோரிடம் வழங்கினர்.

அப்போது, திமுக மாவட்ட கலை, இலக்கியப் பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் கே.செல்வம், அவைத்தலைவர் ஜெ.சாகுல் ஹமீது, பொருளாளர் கோடி முதலி, மாவட்ட பிரதிநிதி, இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி முல்லை ஆர். மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.