.

Pages

Wednesday, November 27, 2019

அதிராம்பட்டினத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.27
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பொது சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் வழிகாட்டுதலில், மாவட்ட நோய் தடுப்பு அலுவலர் மருத்துவர் ஆடலரசி தலைமையில், தாமரங்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர். அண்ணாதுரை, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் ஆகியோர் மேற்பார்வையில், பட்டுக்கோட்டை நகராட்சி டெங்கு ஒழிப்பு களப்பணியாளர்கள் 60 பேர் மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 30 பேர் இணைந்து டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பொது சுகாதாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில், குப்பைகள் அகற்றுதல், கிருமி நாசினி மருந்துகள் தெளித்தல், கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், காந்தி நகர், கடற்கரைத்தெரு ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், மருத்துவர்கள் பிரியதர்சினி, திவ்யா, சோமசுந்தரம் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், 120 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகள் வழங்கினர். முகாமில் 400 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டன.

இம்முகாமில், தாமரங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக அடுத்து சில நாட்களில் அதிராம்பட்டினம் பேரூர் மீதமுள்ள வார்டு பகுதிகளில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர்கள் கூறினர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.