.

Pages

Wednesday, November 13, 2019

ஆட்சியரகத்தில் நவ.15-ல் தொழில் கருத்தரங்கம்!

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒரு நாள் தொழில் கருத்தரங்கம் நவ. 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பங்கேற்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
தமிழக அரசுத் தொழில் நிறுவனங்களைப் புதிதாக உருவாக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்கவும், மானியத்துடன் கூடிய சுய வேலைவாய்ப்புத் திட்டங்களை மாவட்டத் தொழில் மையங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது.

மாவட்டத்தில் வசிக்கும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் சுயமாகப் புதிய தொழிலகங்களை அமைக்க, மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் தமிழக அரசின் திட்டங்கள் மூலம் பெற்றுப் பயன் பெறலாம்.

மாவட்டத்தில் உணவுப் பொருள்கள் தயாரிப்பு, பெல் சாா்பு பொறியியல் தொழிலகங்கள், சி.என்.சி. மெஷின் சென்டா், உணவு எண்ணெய் தயாரிப்பு, ஆயத்த ஆடை தயாரிப்பு, உணவகங்கள் போன்ற தொழிலகங்கள் லாபகரமாக அமைத்திடலாம்.

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இத்திட்டங்கள் பற்றிய அனைத்து விவரங்களும் பொதுமக்கள் அறிந்து, பயன்பெற்றிட ஏதுவாக ஒரு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியரகத்தில் நவ. 15-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதில், வங்கியாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டு தொழிற் கடன் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்ற உள்ளனா். மேலும் விவரம் பெற மாவட்டத் தொழில் மையத்தை 04362 - 255318, 257345 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.