அதிராம்பட்டினம், நவ.02
அதிராம்பட்டினம் செடியன் குளத்துக்கு ஆற்று நீர் இன்று (நவ.02) சனிக்கிழமை மாலை வரத் தொடங்கியது.
மழைக்காலத்தில், செடியன் குளத்துக்கு வரும் நீரை முழுமையாக தேக்கினால், குளக்கரை உடைந்து விடும் சூழல் ஏற்பட்டதால், பருவமழை பெய்வதற்கு முன்னதாக, பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில், செடியன் குளத்தை தூர் வாரி கரையை பலப்படுத்தி இருந்தனர். மேலும், மழையின் போது குளத்தின் சுற்றுப்புறப் பகுதியில் இருந்து வெளியேறும் உபரி நீரை குளத்தில் நிரப்பும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில், அவ்வப்போது பலத்த மழை பெய்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், அதிராம்பட்டினத்தில் 377.60 மி.மீ (38 செ.மீ) மழை பதிவாகியது. இதனால், குளத்திற்கு மழை நீர் மளமளவென வரத் தொடங்கியது. இருந்தபோதிலும், குளம் முழுமையாக நிரம்பவில்லை. குளத்தில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே நீர் நிரம்பி இருந்தது.
இந்நிலையில், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில், மகிழங்கோட்டை பெத்தையன் குளம் ~ செடியன் குளம் வால்வீச்சு வரையிலான ஆற்றுநீர் வழித்தட பாதையை ஜெசிபி இயந்திரத்தின் உதவியோடு தூர் வாரி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் எஸ்.எச் அஸ்லம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், நீர்நிலை ஆர்வலர்கள் ஆகியோர் கல்லணை கால்வாயிலிருந்து வரும் ஆற்று நீரை ராஜாமடம் தாய் வாய்க்கால் மூலம், மகிழங்கோட்டை பெத்தையன் குளம் வழியாக கொண்டு வந்து குளத்தில் நிரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இப்பணிக்காக, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் 2 பேர் உதவியுடன், 10 க்கும் மேற்பட்ட தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க களப்பணியாளர்கள் ஆற்று நீர் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பு, உடைப்புகளை கண்காணித்து சீர் செய்தனர். வழித்தடத்தில் உள்ள முட்புதர்களை அகற்றினர். இதையடுத்து, செடியன் குளத்துக்கு ஆற்று நீர் இன்று (நவ.02) சனிக்கிழமை மாலை வரத் தொடங்கியது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.