.

Pages

Friday, November 8, 2019

அதிராம்பட்டினத்தில் அதிகரித்து வரும் நாய், மாடு தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி TNTJ புகார்!

அதிராம்பட்டினம், நவ.08
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் அதிகரித்துவரும் நாய், மாடுகளின் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-1, கிளை-2 சார்பில், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் பகுதியில் அதிகரித்து வரும் நாய்களையும், சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தவும், அதிராம்பட்டினம் பேரூராட்சி சாலைகளில் முன் அனுமதியின்றி ஆங்காங்கே சுவர்போல் எழுப்பி உள்ள வேகத்தடைகளினால் வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே, உயரமாக எழுப்பி உள்ள வேகத்தடையின் அளவை குறைத்து சீர்படுத்தவும், டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதரப் பணிகள் மேற்கொள்ளவும், பிரதான சாலைகளில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றி, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது, மாவட்ட துணைச் செயலாளர் ஆவணம் ரியாஸ் ஆகியோர் தலைமையில், அதிராம்பட்டினம் கிளை 1, கிளை 2 நிர்வாகிகள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே. ராஜிக் முகமது கூறியது;
தஞ்சை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளான அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் மற்றும் செந்தலைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் மாடுகள் கூட்டம் அதிகமாக நடமாடுவதால் வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி நடக்கிறது.மேலும், தெருநாய்கள் பெருக்கத்தின் தொல்லையால் குழந்தைகள், முதியவர்ள் நடமாட அச்சப்படுகின்றனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், செந்தலைப்பட்டினம், ஆவணம், முடச்சிக்காடு, பேராவூரணி ஆகிய பகுதிகளின் கிளை நிர்வாகிகள் பல நாட்களுக்கு முன் அந்தந்த ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அதிகாரிகள் இனியும் காலதாமதிக்காமல் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில், மாவட்ட அளவில் மக்களை திரட்டி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என்றார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.