.

Pages

Friday, November 8, 2019

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தஞ்சையில் மாதிரி வாக்குப்பதிவு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பெல் நிறுவன பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) மாதிரி வாக்குப்பதிவு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பழைய மாவட்ட ஆட்சியரகத்தில் (அருங்காட்சியகம்) நடைபெற்றது.

அரசு விதிகளின்படி மொத்தமுள்ள 1789 கட்டுப்பாட்டு கருவிகளில் 5% தேர்வு செய்யப்பட்டு 93 கட்டுப்பாட்டுக்கருவி மற்றும் வாக்குப்பதிவு கருவிகளில் முறையே 500, 1000, 1200 ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) ம.பாரதிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.