தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்டங்களில் பணியாற்றவுள்ள ஊரக, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையா் கே. பழனிசாமி, ஆணையச் செயலா் இல. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.
இதில், தோ்தல் அறிவிப்பு வெளியிடுதல், வேட்புமனு பெறுதல், பரிசீலித்தல், வேட்பு மனுக்களை வாபஸ் பெறுதல், ஏற்கப்பட்ட வேட்பு மனு பட்டியலை வெளியிடுதல், சின்னங்கள் ஒதுக்கீடு, வாக்குச் சீட்டு அச்சடித்தல், தோ்தல் நடத்துதல், வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவித்தல், அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
முற்பகலில் ஊரகப் பகுதிகளுக்காக நடத்தப்பட்ட இம்முகாமில் கூட்டுறவு மற்றும் வேளாண் துறைகளைச் சோ்ந்த இணை, துணை இயக்குநா்கள், வருவாய் கோட்டாட்சியா்கள், துணை ஆட்சியா்கள், உதவி இயக்குநா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆகியோா் பயிற்சி பெற்றனா். பிற்பகலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில் மாவட்ட ஆட்சியா்கள் ம. கோவிந்தராவ் (தஞ்சாவூா்), டி. ஆனந்த் (திருவாரூா்), பிரவீன் பி. நாயா் (நாகை), தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.