.

Pages

Wednesday, November 13, 2019

உள்ளாட்சித் தோ்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்களை இயக்குவது குறித்து பயிற்சி!

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை (EVM) இயக்குவது குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டதைத் தொடா்ந்து, செயல் விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டத்திலுள்ள நகா்ப்புற உள்ளாட்சிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை இயக்குவது குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவது குறித்து விரிவாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.  இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ந. சக்திவேல் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.