தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரி வளாகத்தில் இன்று (24.11.2019) நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உரிமையியல் நீதிபதிக்கான போட்டித் தேர்வினை (Civil Judge Examination) மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்தராவ் முன்னிலையில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி நிர்மல் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இத்தேர்விற்கு தஞ்சாவூரில் பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் 400 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இன்று நடைபெற்ற தேர்வில் 367 நபர்கள் தேர்வு எழுதினர். 33 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. இது 91.75% ஆகும்.
தேர்வு தொடங்கிய அரை மணி நேரத்திற்கு பின்னர் அதாவது 10.30 மணிக்கு பின்னர் தேர்வர்கள் யாரையும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும், தேர்வர்கள் எவரும் செல்போன், ஐபேட், கால்குலேட்டர், டேபிளேட் மற்றும் அதிநவீன மின்னணு சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்போன் கொண்டுவந்த தேர்வர்களை செல்போனை தனி அறையில் சமர்ப்பித்து அதற்கான டோகனை பெற்று கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின் வசதி, செய்யப்பட்டுள்ளது.
தேர்வு கண்காணிப்பில் ஈடுபடும் அலுவலர்கள் கவனமாக பணியாற்றவும், 100 சதவிகிதம் தவறுகள் நடைபெறாமல் கண்காணிக்கவும், தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், முதன்மை கூடுதல் மாவட்ட நீதிபதி கருணாநிதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஷ்வரன், மாவ்ட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.