அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத கடைகளை இன்று வெள்ளிக்கிழமை பேரூராட்சி அலுவலர்கள் பூட்டி 'சீல்' வைத்தனர்.
அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில், கட்டி முடிக்கப்பட்ட 24 வர்த்தக கடைகளுக்கான பொது ஏலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்டன. இதில், மொத்தம் 109 பேர், ரூ.1 லட்சத்திற்கான டிடி முன்வைப்பு தொகையை செலுத்தி ஏலத்தில் கலந்துகொண்டனர். குறைந்தபட்ச மாத வாடகை தொகையாக ரூ 500 லிருந்து ஆராம்பமாகியது. அதிகபட்சமாக ரூ 26,900 க்கும், குறைந்த பட்சமாக ரூ 8,100 க்கும் கடைகள் ஏலம் போனது.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கடைகள் நடத்தி வருபவா்கள் கடந்த 4 ஆண்டுகளாக பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனா். இதையடுத்து வாடகையை உடனே செலுத்த வேண்டும் என்று பேரூராட்சி அலுவலர்கள் அறிவிப்பு அனுப்பியிருந்தனா். இருப்பினும் அவா்கள் வாடகை செலுத்தவில்லை.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன், உதவி ஆய்வாளர் ஜார்ஜ் ராஜா, துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் அசாருதீன் ஆகியோா் முன்னிலையில், பேரூராட்சி பணியாளா்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று வாடகை செலுத்தாத 24 கடைகளையும் பூட்டி 'சீல்' வைத்துச் சென்றனா்.
தாமதமான நடவடிக்கை இருந்தாலும் வரவேற்கலாம், தனியார் கடை வாடகை விட அரசு நிர்ணயித்த வாடகை தொகை அதிகம். ஆட்டைய போடத்தான் அதிக தொகைக்கு எடுத்தார்கள் என்று இப்போ தெரியுதா
ReplyDelete