இவரின் நிலை குறித்து அதிரை நியூஸ் தளத்தில் கடந்த [ 12-12-2013 ] அன்று 'உயிருக்கு போராடும் பிலால் நகர் சகோதரனுக்கு உதவிடுவீர் !' என்ற தலைப்பில் உள்ளூர் மற்றும் வெளிநாடுவாழ் அதிரை சகோதரர்களிடம் உதவி கோரப்பட்டது. இதில் இவருடைய குடும்பத்திற்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள ஹாஜா அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது அன்றைய பதிவில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூர் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது அந்த சகோதரர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
அதிரை நியூஸ் சார்பாக அதிரை எக்ஸ்பிரஸ் வலைதளத்தில் பதிவிட வேண்டுகோள் விடப்பட்டதின் அடிப்படையில் அவற்றை பதிவிட்டும் இருந்தனர். இவற்றை பார்வையிட்ட நல்லுள்ளம் படைத்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சகோதரர் ஹாஜா அவர்களுக்கு உதவும் விதமாக நேரடியாகவும், வங்கி கணக்கின் வழியாகவும் முன்வந்தனர்.
இதில் சமூக ஆர்வலரும், தொடர்ந்து பல்வேறு மருத்துவ, வாழ்வாதார உதவிகளை முன்னின்றி செய்துவரும் லண்டன்வாழ் அதிரையர் S.A இம்தியாஸ் அஹமது அவர்கள் மூலம் திரட்டப்பட்ட ரூபாய் 10,000/- த்தை த.மு.மு.க அதிரை நகர நிர்வாகிகள் முன்னிலையில் இன்று மாலை வழங்கப்பட்டது. உதவியை பெற்றுக்கொண்ட ஹாஜா குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு வழங்கியோருக்கு துவாவும் செய்தனர்.
குறிப்பு : இதுவரையில் ஹாஜா குடும்பத்தினர் பெற்றுக்கொண்ட உதவிகள் குறித்த தகவல்கள் சகோ. ஹாஜா அவர்களின் நன்றி அறிவிப்போடு விரைவில் தளத்தில் வெளியிடப்படும்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
நல் உள்ளங்களுக்கு அல்லாஹ் அவனின் அருள் என்றும் உண்டு.
ReplyDeleteநல் உள்ளம் கொண்ட நன்கொடையாளர்களுக்கு அல்லாஹ் அவர்களுக்கு நற்சுவனத்தில் ஈர்கப்படுவான் ஆமீன்
ReplyDelete