எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடாத 37 தொகுதிகளில் தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தருவது என கட்சியின் 26.03.2014 அன்று நடைபெற்ற நிர்வாகக்குழுவில் முடிவு செய்தனர்.
இதையடுத்து அதிரை நகர திமுக நிர்வாகிகள், அதிரை நகர எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவதற்காக இன்று இரவு 8 மணியளவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
இச்சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது இல்யாஸ், நகர தலைவர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர். இரு கட்சியினரும் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் திமுக வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவது என முடிவு செய்துள்ளனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.