.

Pages

Monday, March 10, 2014

அதிரையில் த.மு.மு.க வினரை சந்தித்த தி.மு.க வினர் !

தமிழக அரசியலில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைக்கப்பட்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் தி.மு.கவோடு, மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து மயிலாடுதுறை தொகுதியை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது நாம் அறிந்த ஒன்று.

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் TR பாலு போட்டியிட இருப்பதற்கான அறிவிப்பு வந்ததை அடுத்து அக்கட்சியினர் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு 7.30 மணியளவில் திமுகவின் கூட்டணி கட்சியான த.மு.மு.க / ம.ம.க வின் அலுவலகத்திற்கு முதன் முதலாக வருகைதந்த திமுக நகர நிர்வாகிகள் த.மு.மு.க / ம.ம.க நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். இரு கட்சியினரும் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுவது என முடிவு செய்துள்ளனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சந்திப்பு குறித்து த.மு.மு.க / ம.ம.க வின் நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி நம்மிடம் கூறுகையில்...
'இது மரியாதை நிமித்தமான மகிழ்ச்சிகரமான சந்திப்பு என்றும், இந்த சந்திப்பில் இரு கட்சியினரும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட சில சங்கடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து கொள்ளப்படும் என திமுக நிர்வாகிகள் உறுதியளித்தது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது' என்றார்.








9 comments:

  1. டி. ஆர் பாலு தோற்கடிக்கப்பட வேண்டியவர்...

    50 ஆண்டுகளாக ஓடிய தொடர்வண்டி போக்குவரத்தை எங்கள் பகுதியிலிருந்து நீக்குவதற்கு உழைத்து வெற்றி கண்டவர்.

    என்ன செய்ய, உப்பு விளையும் இந்த பூமியில் சூடு சொரணை இல்லாத ஜென்மங்களும் இன்னும் இருக்கிறாங்களப்பா....

    #தேர்தல்2014

    என்னை முகநூலில் பின்தொடர

    ReplyDelete
  2. நிதித்துறை இணை அமைச்சராக இருந்த திமுகவின் பழனிமாணிக்கத்துக்கு #கனிமொழி 2ஜி ஊழலில் சிக்கியிருந்த போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை காப்பாற்ற எடுத்துக்கொண்ட அக்கறையில் துளி அளவுக் கூட #பட்டுக்கோட்டை மார்க்கமான அகலப் பாதை இரயில் போக்குவரத்திற்கு முயற்சிக்கவில்லை.

    மீண்டும் #திமுக மக்களவை உறுப்பினரையா தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்.

    # தோற்கடிக்கப்பட வேண்டியவர் #டிஆர்பாலு

    ReplyDelete
  3. Dhanapal Arumugam:

    திமுக சார்பாக தஞ்சை யில் நிற்பவர் மன்மோகனே மிரண்டுபோன மிகப்பெரிய ஊழல்வாதி. மன்மோகன் மிரண்டவர் என்றால் அவ்ளோ பெரிய அயோக்கிய அரசியல்வாதி யார்..?? வேறுயாருமல்ல சாட்ஷாத் TR பாலுவே தான். தஞ்சையின் மாண்பு, இந்த மன்மோகன் மிரண்ட ஊழல்வாதி பாலுவை நிராகரிப்பதில் தான் உள்ளது. இல்லையேல் இன்னொரு ஆ.ராசாவை தேர்ந்தெடுத்த குற்றத்திற்கு ஆளாகிவிடுவீர்கள்.

    ReplyDelete
  4. Dmk âne el eratdai kulal thuppakke eruppathal anakku theavai vealurum,,.,.mayavaramum than. Mamaka...iuml....ensa Allah erandu por verar kal veatre peara valththukkal

    ReplyDelete
  5. மாஹிர் அவர்களே சற்று தொலைநோக்கு பார்வையில் பாருங்கள் தற்பொழுது இன்று தமிழ்நாடு பூராவும் சாலை வசதிகள் எல்லாம் கிடைபதற்கு போக்குவரத்து இலாக்காவை இவருக்கு கொடுத்ததினால் எல்லாவற்றிலும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து அவரால் முடிந்ததை செய்திருப்பதை தாங்களும் கண்முன்னால் பார்க்கமுடிகிறது இத்தனை தடவை நம் தொகிதிளிருந்து தேர்ந்தெடுத்த MP &MLA இவர்களின் தொகிதிக்காக என்ன செய்தார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும் ஆகையால் நாம் கோரிக்கை வைப்போம் இன்னார் செய்தல் ஒருத்தல் அவர் செய்தல் நன்னயம் செய்திடல் என்பதையும் உணர்ந்து கொள்வோம்

    ReplyDelete
  6. நல்ல திட்டங்கள் கொண்டு வந்ததற்காக தான் நீங்கள் திமுகவிற்கு ஆதரவு கொடுக்கிறீர்களா? அல்லது ஒரு சீட்டுக்காக ஆதரவு கொடுக்கிறீர்களா?

    கடைசியாக சொன்ன பழமொழி

    //இன்னார் செய்தல் ஒருத்தல் அவர் செய்தல் நன்னயம் செய்திடல் என்பதையும் உணர்ந்து கொள்வோம்//

    இந்த பழமொழி திமுகவினர் தான் சொல்லவேண்டும்

    ReplyDelete
  7. Adedasakka............vu. Vu. Vu. Vu. Vuvu

    ReplyDelete
  8. தொகிதியைபற்றி தெரிந்துகொள்ளுங்கள் 6 MLA கொண்டது தான் ஒரு MP தொகுதி, ஊதா கலர் சட்ட என்ன நிர்ணயித்தார் ரேட்ட..?

    ReplyDelete
  9. பெட்டி கொடுத்தாலும் சரி புட்டி கொடுத்தாலும் சரி வாங்கிகொண்டு நிதானமாக டி ஆர் பாலுவிற்கு எதிராக வாக்களித்து அவரை தோல்வியுற செய்யவேண்டும். ஊழலில் திளைதவர்களுக்கு நல்ல பாடம் இருக்கு,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.