.

Pages

Sunday, March 23, 2014

மேலத்தெரு 16,17 வது வார்டுகளில் திமுகவினர் நடத்திய தேர்தல் ஆலோசனைக் கூட்டம் !

திமுகவினர் நடத்திய அதிரை நகர 16,17 வது வார்டுகளின் தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் செயல்பாடு ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் மேலத்தெருவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமை வகிக்க, திமுக மாவட்ட பிரதிநிதி மீராஷா, 16 வது வார்டு உறுப்பினர் முஹம்மது யூசுப் திமுக ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், திமுக முன்னோடி யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அப்பகுதியினரின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டன. அதை தொடர்ந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் டிஆர் பாலுவை வெற்றிபெற வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பெரும்பாலானோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினார்கள்.







3 comments:

  1. சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே,,,அரசியல் வாதிகள் வோட்டு கேட்கிற sytleலே,,, அதிரைக்கு எப்ப வருவா ரயிலே? ஆவலுடன் அதிரை மக்கள்

    Fazee Canada

    ReplyDelete
  2. பொது மக்கள் வைக்கும் கோரிக்கை நிறைவேற்றாமல் போனால் என்ன பண்ணுவது என்பதையும் ஆலோசனை பண்ணிக்கோங்க, தேர்தல் பிறகு பாலு இந்த பக்கம் வரமாட்டார்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    நல்லதொரு முயற்சி,.
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.